Sunday, January 22, 2012
நம்பிக்கை!
நம்பிக்கை என்றால் என்ன? எதை நம்புவது? யாரை நம்புவது? எப்படி நம்புவது? இந்த ஆராட்சிகளுக்கு அப்பால் நம்ப வேண்டும். அடிப்படை நம்பிக்கை என்பது இல்லாத எவராலும் எதையும் இலகுவில் அடைந்துவிட முடியாது. இந்த பூமியில் நம் பிரசவமே நம் தாயின் 10 மாத பொறுமையும் அசராத நம்பிக்கையும்தான்! அத்தனை தோல்விகளையும் இழப்புக்களையும் தாண்டி வாழ்ந்து கொண்டும் செத்துக்கொண்டும் இருக்கும் நம் மனிதம் நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் என்றோ மண்ணோடு மண்ணாய் மரித்துப்போயிருக்கும்!
ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை என்பது இன்று எவரிடமும் இல்லை கணவன் மனைவியையோ மனைவி கணவனையோ நம்புவதில்லை, நண்பர்களுக்கிடையே நல்ல நம்பிக்கை இல்லை, பெற்றோர் பிள்ளைகளை நம்புவதில்லை பிள்ளைகள் பெற்றோரை நம்புவதில்லை! ஆக, நம் உறவுகளுக்கிடையே நடந்து கொண்டிருப்பது வெறும் நடிப்பு மட்டுமே! பரஸ்பரம் தங்களுக்கிடையே வெறும் நடிப்பை மட்டுமே பரிமாறிக் கொண்டிருக்கும் உறவு முறைகளை உறவு முறைகள் என்று ஏற்றுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது! நம்பிக்கை இல்லாத இடம் வெறும் நரகமே! நரகம் மட்டுமே!
பிறரை நம்புவதில் சில பல சிக்கல்கள் உண்டுதான் இருந்தாலும் நம்புங்கள். அது நமக்கு சதகமானது என்று நம்புங்கள். கடவுளை நாம் யாரும் கண்டதில்லையே! இருந்தும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறோமே அந்த நம்பிக்கைதான் நமக்கெல்லாம் கடவுள்!
இந்த நம்பிக்கையை பற்றி பெரும் சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்கள் ஒரு அருமையான கதை சொன்னார் என்னவென்றால், ஒரு ஊரில் மழையே இல்லாமல் வறட்சி தலை விரித்தாடியதாம் ஊரில் உள்ளவர்களெல்லாம் சேர்ந்து மழை வேண்டி பிரார்த்தனை கூட்டம் ஒன்றை நடத்த முடிவுசெய்து நடத்திக்கொண்டு இருந்தார்கள் எல்லோரும் வெறுங்கையை வீசிக்கொண்டு வந்தனர். பிஞ்சுப்பிள்ளை மட்டும் கையில் குடையுடன் வந்தது பிரார்த்தனை முடிந்ததும் மழை வரும் என்கிற அந்த பிஞ்சுப் பிள்ளை மனதில் முழை விட்ட நம்பிக்கை கடவுளையே யோசிக்க வைத்தது! அவ நம்பிக்கை உள்ள ஆயிரம் பேரை தண்டிப்பதை விட நம்பிக்கை உடைய ஒரு குழந்தைக்காக மழை பெய்விப்பது தன் கடமை என்பதை கடவுள் புரிந்து கொண்டார்.
நம்புங்கள்! நம்பினோர் கெடுவதில்லை! நம்பிக்கைதான் வாழ்க்கை!!!
-கறுப்பி-
Subscribe to:
Post Comments (Atom)
உளியோடு சேரும் கருங்கல்லின் நம்பிக்கை சிற்பம் அப்பிடிதானே?
ReplyDeleteம்ம்ம் அப்படித்தான்!!!
ReplyDeleteதங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!!!